என் மணாளா என் பிரியரே

 

என் மணாளா என் பிரியரே

என் நாயகா எந்தன் இயேசுவே

உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம்

கன்னியர்கள் உம்மை நேசிப்போமே  - என்

 

 

இழுத்து கொள்ளும் உம் பின்னே வருவோம்

அழைத்து கொள்ளும் உமக்குள் மகிழ்வோம்

திராட்சை ரசத்திலும் உந்தன் நேசம் பெரிது

நேசத்தாலே நான் சோகமானேன்   - என்

 

 

இடது கை என் தலையின் கீழே

வலக்கரம் என்னை மார்போடு அணைக்கும்-உம்

கிச்சிலி மரம் போல் என் நேசர் உள்ளீர்

உம் நிழலில் நானும் வாஞ்சையாய் தங்குவேன் - என்

 

 

விருந்து சாலைக்குள் அழைத்து போனார்

அவர் நேசக்கொடியோ என் மேலே பறந்தது

எந்தன் புறாவே எந்தன் உத்தமியே

என அழைத்து என்மேல் அன்பை பொழிந்தார் - என்